பாகிஸ்தான் விமான விபத்து : பலியானோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தான் விமான விபத்து : பலியானோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு!

நேற்று “Pakistan International Airlines” க்கு சொந்தமான ஏ320-Airbus ரக விமானம், பாகிஸ்தானில் லாகூரில் இருந்து கராச்சிக்கு புறப்பட்டது. பிந்திய தகவலின்படி, அதில், 90 பயணிகளும், 10 சிப்பந்திகளுமாக மொத்தம் 100 பேர் இருந்துள்ளனர்.

கராச்சியில் உள்ள “Jinnah” சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க முயன்றபோது, இயந்திர கோளாறு ஏற்பட்டது. அதனால் தரை இறங்க முடியவில்லை. அதனால், விமான நிலையத்துக்கு மேலே விமானம் வட்டமடித்துக் கொண்டிருந்தது.

இரண்டு, மூன்று தடவை முயற்சித்தும் தரை இறங்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து, எதிர்பாராமல், விமான நிலையத்துக்கு அருகே உள்ள மாடல் காலனி என்ற குடியிருப்பு பகுதியில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments