பாடசாலைகளைக் கையகப்படுத்தும் இராணுவம், நிம்மதி இழந்த வடகிழக்கு தமிழ்மக்கள்!

You are currently viewing பாடசாலைகளைக் கையகப்படுத்தும் இராணுவம், நிம்மதி இழந்த வடகிழக்கு தமிழ்மக்கள்!

18ம் நூற்றாண்டில் கடினமாக பல மணிநேரங்கள் உழைத்த தொழிலாளர்களுக்காக 1ம் திகதி மே மாதம் 1886ம் ஆண்டு உருவாக்கப்பட்டதே தொழிலாளர் தினம் ஆகும். இவ்வருடம் தொழிலாளர் தினம் கொரோணா வைரசு காரணமாக கூட்டங்கள், ஒன்றுகூடல்கள் மற்றும்  ஊர்வலங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அமைதியபன சத்தமில்லாத சூழலில் சிறிலங்காவில் ஆக்கிரமிப்புகளும் அடக்குமுறைகளும் சத்தமில்லாமல் கச்சிதமாக நடைபெற்று வருகின்றது.


சிறிலங்காவின் ஆக்கிரமிப்பு இராணுவம் சமீபத்திய நாட்களில் வடக்கு மாகாணத்தில் சுமார் ஐம்பது பள்ளிகளைக் கொரோணா தனிமைப்படுத்தலைக் காரணம் காட்டி கைப்பற்றியுள்ளது. கைப்பற்றப்பட்ட பாடசாலைகளைச் சுற்றி சிங்கள இராணுவத்தினர் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர், அராஜகமாகக் கையகப்படுத்தப்பட்ட பள்ளிகளுக்குள் என்ன நடக்கிறது என்பதைக் கூடத் தெரிந்துகொள்ள இயலாது உள்ளது என்று வடக்கு வாழ் தமிழ்மக்கள் மிகுந்த வேதனையுடன் கூறுகின்றனர்.

தாயகத்தில் இயங்கும் பல தமிழ் சிவில் அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி சிறிலங்கா இராணுவம் பாடசாலைகளை கொரோணாத் தனிமைப்படுத்தப்படும் மையங்களாக மாற்றும் நோக்கில் செயற்பட்டு வருவதாக அறிகின்றோம். சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் பள்ளிகளிலிருந்து தளபாடங்களை இடமாற்றம் செய்து கைப்பற்றப்பட்ட பள்ளிகளுக்கு மக்களை அழைத்து வருவதாகவும் அழைத்து வரப்படுபவர்கள் யார் எதற்காக எங்கிருந்து அழைத்து வரப்படுகிறார்கள் என்ற விபரம் அறியமுடியாமல் உள்ளதாகவும் யாழ் அமைப்புகள் கூறுகின்றன.


வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களிலும், யாழ்ப்பாணத்திற்கு வெளியே உள்ள தீவுகளிலும் ஊழுஏஐனு-19 பரவல் அடையாளம் காணப்படவில்லை என்றாலும், மக்கள் தொகை நிறைந்த பகுதிகளுக்கு மத்தியில் அதிக எண்ணிக்கையில் இராணுவமயமாக்கப்பட்ட தனிமைப்படுத்தும் நிலையங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊழுஏஐனு-19 பரவலின் தற்போதைய காலகட்டத்தில் பள்ளிகளைத் தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றக்கூடாது என்ற விதிமுறைகள் ஏற்கனவே சிறிலங்கா கல்வி அமைச்சகம் கடைபிடிக்கும் அதே வேளையில், தமிழர் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம் வேறுபட்ட அணுகுமுறையைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது, இந்த நடவடிக்கையானது பலதரப்பட்ட சந்தேகங்களை தமிழர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு திட்டமிட்ட இனவழிப்பின் வேறு ஒரு வடிவமாகவும் இருக்கலாம். கொரோணாவைக் காரணம் காட்டி தமிழர் பகுதிகளுக்கு தெற்கிலிருந்து சிங்களவர்களை இரகசியமாகக் கொண்டு வருகிறார்களா என்ற பலத்த சந்தேகமும் உள்ளது. 2009ம் ஆண்டிற்குப் பின் தமிழர்களின் கல்விநிலை திட்டமிட்டு தீய பழக்கங்களை தமிழர் பகுதிகளில் புகுத்தித் தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தினார்கள். இப்போது இராணுவத்தினர் தமிழர் பகுதிகளில் உள்ள பாடசாலைகளைக் கைப்பற்றுவதன் ஊடாகத் தமிழ் மாணவர்களின் கல்வித்தரத்தை மேலும் அதளபாதளத்திற்குத் தள்ளுவதே சிறிலங்கா சிங்கள அரசின் நோக்கமாகும். காலங்காலமாகத் தமிழர்களை அடிமைப்படுத்துவதிலேயே குறிக்கோளாக உள்ளது பேரினவாத சிங்கள அரசு.

சிறிலங்கா இனவழிப்பு இராணுவம் பொதுமக்களின் கவலைகளைப் புறக்கணித்து முடிவுகளைத் தன்னிச்சையாக எடுக்கிறது. இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் மக்கள் குடியிருப்புகளில் இருந்து தொலைதூரத்தில் குடியிருப்பு அல்லாத பகுதிகளில் நிறுவப்பட வேண்டும். சிறிலங்கா இராணுவம் வேண்டுமென்றே அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட இடங்களில் தனிமைப்படுத்தல் மையங்களை உருவாக்குகிறது. அதுவும் திட்டமிட்டே வடக்கில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் ஒரு ஆரோக்கியமற்ற அடுத்த தமிழர் தலைமுறை உருவாக வேண்டும் என்பதே இந்த நகர்வுகளின் பின்னணியில் உள்ள நோக்கமாகும்.


சர்வதேசமே கொரோணா வைரசுத் தொற்றுக்குப் பயந்து வீட்டிற்குள் முடங்கியிருக்கையில் சிங்களப் பேரினவாத அரசு சத்தமில்லாமல் ஒரு இனவழிப்பு யுத்தம் செய்கின்றது. சிங்களத்துடன் இணைந்து எமது சுயநிர்ணய உரிமையைப் பறித்த சர்வதேசம் இனியாவது எமக்கான நீதியைப் பெற்றுத்தராதா? இப் பூமியல் காணப்படும் சட்டங்களும் வரையறைகளும் மனிதராலேயே உருவாக்கப்பட்டவை. மனிதனால் உருவாக்கப்பட்ட மனிதனுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்களையும் ஒழுங்குகளையும் மனிதனால் நிச்சயமாக மாற்ற முடியும். ஊலகமயமாக்கல் என்ற சூனியத்தில் இருந்து இந்த உலக ஒழுங்கை தேசிய இனங்களின் பாதுகாப்பிற்காக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் ஈழத்தமிழர்கள் தொடர்ந்தும் போராட வேண்டும்.

-தமிழரிர் தாகம் தமிழீழத் தாயகம்-
-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

English PR

Workers must unite against oppression  International Council of Eelam Tamils

May 1 was proclaimed as “Workers’ Day” back in 1886 to recognize the hardworking labour and organize is it as a powerful movement.  This year the COVID-19 pandemic has necessitated cancellation of large gatherings.  Under the cover of COVID-19 crisis, Sri Lanka is quietly tightening its stranglehold of the oppressed Tamil population reeling under a heavy military presence.  The military has taken over 50 schools in densely populated areas under the pretext of setting up quarantine centres in an area where the number of reported cases have steadily declined.  This region already has a dismal educational record due to several decades long conflict.  When people from the south are transferred to these quarantine centres, the danger of infecting the local Tamil population in this area increases.  The students and teachers also suffer without access to these schools.

            While the Sri Lanka Education Ministry has not allowed schools to be used as quarantine centres in Sinhala areas in the south of the island, the take over schools in Tamil areas aided by the heavy military presence to transfer suspected Sinhala cases from the south raises many questions about the motive of the a Government of Sri Lanka.  Is this another form of “biological warfare” to destroy the Tamils?  Is this transfer of population under the cover of COVID-19 pandemic new form of genocide?  The occupying army has been encouraging the distribution of narcotics among School children in Tamil areas to destroy their education.  The take over of schools is seen as an extension of this plan to keep Tamils subjugated forever.

            In this age of accelerated globalization, destroying the education of a people is a way to create an uneducated underclass providing cheap labour.  On this May Day workers must unite to stop the exploitation of people under occupation by a foreign army.  The use of COVID-19 crisis to further oppress people must stop.

-International Council of Eelam Tamils-

பகிர்ந்துகொள்ள