பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் ; ஊழியர்களுக்கு விடுமுறை கொடுப்பனவு செலுத்த முடியுமா!

You are currently viewing பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் ; ஊழியர்களுக்கு விடுமுறை கொடுப்பனவு செலுத்த முடியுமா!

சமீபத்திய “NHO” புள்ளிவிவரங்களின்படி, நிறுவனங்களில் கால் பகுதியினர் தமது ஊழியர்களுக்கான விடுமுறை கொடுப்பனவை செலுத்த முடியுமா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் விடுமுறை கொடுப்பனவை பெற முடியுமா என்பது சந்தேகமே!

4,088 NHO உறுப்பினர்களின் ஒரு கணக்கெடுப்பின்படி, நோர்வே நிறுவனங்களில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் ஊழியர்களுக்கு விடுமுறை கொடுப்பனவு கொடுக்க முடியாத அபாயத்தில் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

கணக்கெடுக்கப்பின்படி 11 விழுக்காடு நிறுவனங்கள் ஊழியர்களுக்கான விடுமுறை கொடுப்பனவு கடமையை பூர்த்தி செய்ய முடியாது என்று கூறியுள்ளனர், மேலும் 13 விழுக்காடு ஜூன் மாதத்தில் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை கொடுப்பனவு செலுத்த முடியுமா என்று உறுதியாக தெரியவில்லை என்று கூறியுள்ளதாகவும் ‘Dagens Næringsliv‘ பத்திரிகை எழுதியுள்ளது.

பகிர்ந்துகொள்ள