பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டில் அமெரிக்க நாடாளுமன்றம்!

பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டில் அமெரிக்க நாடாளுமன்றம்!

அமெரிக்க நாடாளுமன்ற வளாகம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், நாடாளுமன்ற வளாகத்தில் அத்துமீறி நுழைந்தமைக்காக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாடாளுமன்ற வளாகத்தை ஆக்கிரமித்திருந்த தனது ஆதரவாளர்களுக்கு “Twitter” வலைத்தளம் மூலம் உரையாற்றிய அதிபர் டிரம்ப், தேர்தலில் தாமே வென்றதாகவும், எனினும் வெற்றியை எதிரணியினர் திருடி விட்டார்கள் எனவும், இவ்வாறானதொரு நிலையில், தனது ஆதரவாளர்கள் இவ்வாறுதான் நடந்துகொள்வார்கள் எனப்பொருள்படும் விதத்திலும் கருத்துக்களையும் தெரிவித்திருந்தார். அவரின் இக்கருத்தை “Twitter” மற்றும் “Facebook” ஆகிய சமூகவலைத்தளங்கள் பதிவிலிருந்து நீக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள