பாராளுமன்றை சபாநாயகர் கூட்டலாம்: ஹக்கீம்

பாராளுமன்றை சபாநாயகர் கூட்டலாம்: ஹக்கீம்

ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருப்பதன் மூலம்,  பாராளுமன்றத்தைக் கலைப்பதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மார்ச் 2 இல் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டரீதியாகவே வலுவற்றதாகிவிட்டதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ராவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கின்றார்.

“அரசாங்கம் இப்போது செயற்படும் முறை ஜனநாயக விழுமியங்களை மீறி சர்வாதிகார போக்கில் செல்வதற்கான வழியைத்தான் ஏற்படுத்துகின்றது. இந்த நிலையில் பாராளுமன்றத்தை சபாநாயரே கூட்ட முடியும். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூடிப் பேச வேண்டும். அரசாங்கக் கட்சியும் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு செயற்படுவது அவசியம்” எனவும் ஹக்கீம் தெரிவித்தார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments