பாரிய குற்றமிழைத்த தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது!

பாரிய குற்றமிழைத்த தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது!

தமிழ் அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்கள் செய்தவர்களை விடுவிக்க முடியாது. ஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

‘சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியும் நானும் ஆராய்ந்து வருகின்றோம். விடுவிக்கக்கூடிய கைதிகளை விரைந்து விடுவித்தே தீருவோம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியிருந்தேன். அதன்போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பிலும் பேசப்பட்டது.

அந்தப் பேச்சில் நான் கேட்டுக்கொண்டமைக்கமைய சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்ப்பட்டியல் பின்னர் கிடைக்கப் பெற்றது.

இந்த விவகாரத்தை நீதி அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளோம்.

தமிழ் அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்கள் செய்தவர்களை விடுவிக்க முடியாது. ஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments