பாலியல் இலஞ்சம் கோரிய கிராம உத்தியோகத்தருக்கு பிணை!

பாலியல் இலஞ்சம் கோரிய கிராம உத்தியோகத்தருக்கு பிணை!

மன்னார் – முத்தரிப்புத்துறை பகுதியில் பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக கூறப்படும் கிராம உத்தியோகத்தருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய கைது செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தருக்கு நேற்று பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த கிராம உத்தியோகத்தரை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இரண்டு தரப்பினரையும் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

மன்னார் – முத்தரிப்புதுறை பகுதியில் பெண்ணொருவரிடம் தொலைபேசியில் தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு பாலியல் இலஞ்சம் கோரியதாக கிராம உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள