பாலியல் துஸ்பிரயோக முயற்சி ஆங்கில ஆசிரியர் கைது!

பாலியல் துஸ்பிரயோக முயற்சி ஆங்கில ஆசிரியர் கைது!

முல்லைத்தீவு வெலிஓயா கிராமத்தில் 11 அகவை சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயற்சி செய்தமை தொடர்பில் 37 அகவையுடைய ஆங்கில ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 04.11.2020 அன்று வெலிஓயாப்பகுதியில் தனியார் வகுப்பில் வீட்டிற்கு ஆங்கிலம் கற்கச்சென்ற சிறுமியின் கையினை பிடித்து இழுத்து கட்டிப்பிடிக்க முயன்றுள்ளதாக சிறுமியின் பெற்றோரால் வெலிஓயா பொலீசாரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டினை தொடர்ந்து 05.11.2020 அன்று குறித்த ஆங்கில ஆசிரியரை கைதுசெய்த வெலிஓயா பொலீசார் அவரை ஹெப்பட்டிகொலவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது சிறுமியினை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவத்தினை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குறித்த சிறுமி மருத்துவ அறிக்கைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments