பாலியல் லஞ்சம் கோரிய அரசியல் கட்சியின் யாழ். அமைப்பாளர் உள்ளிட்ட இருவர் கைது!

You are currently viewing பாலியல் லஞ்சம் கோரிய அரசியல் கட்சியின் யாழ். அமைப்பாளர் உள்ளிட்ட இருவர் கைது!

அரச வேலை பெற்றுத் தருவதாக கூறி, பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கோரிய இருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் ஹர்ஷண கெகுணவெல, இன்று உத்தரவிட்டார்.

அரசியற் கட்சியொன்றின் யாழ். மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்ட இருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த பெண்ணை 50 ஆயிரம் ரூபாய் பணத்துடன் வருமாறு அறிவிக்கப்பட்டதாக ஆணைக்குழுவில் அந்தப் பெண் முறைப்பாடு அளித்துள்ளார்.

புறக்கோட்டையிலுள்ள உணவகம் ஒன்றில் வைத்து பணத்தைப் பெற முயன்றபோது, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு மன்றுக்கு அறிவித்தது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments