பின்லாந்தில் கொரோனா வைரஸ் – சந்தேகத்தில் இருவர்!

பின்லாந்தில் கொரோனா வைரஸ் –  சந்தேகத்தில் இருவர்!

கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படும் சீன குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இன்று இரவு பின்லாந்தில் உள்ள இவாலோ (Ivalo) சுகாதார மையத்திற்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் வருகை தந்ததாக செய்தித்தாள் Svenske Expressen தெரிவித்துள்ளது.

குறித்த குடும்பம் நோர்வே வழியாக பின்லாந்திற்குள் வந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதுவரை 26 உயிர்களைக் கொன்ற இந்த வைரஸால் அவர்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்த விரிவான சோதனைகள் இப்போது நடைபெறுகின்றது என்றும்,
பூர்வாங்க பதில் இன்று இரவு அல்லது பிற்பகலில் வெளிவரும் என்றும் பின்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பு: பிந்திக்கிடைத்த தகவலின்படி அந்த இரண்டு சீனர்களும் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்று NRK தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த