பின்லாந்தில் நடைபெறும் தமிழர் உரிமைக்கு வலுச்சேர்க்கும் வாகனப்பேரணி .!

பின்லாந்தில் நடைபெறும் தமிழர் உரிமைக்கு வலுச்சேர்க்கும் வாகனப்பேரணி .!

அறுபது ஆண்டுகளிற்கும் மேலாக, சிறிலங்கா பௌத்த பேரினவாத அரசுகளினால், திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட , தமிழர்கள் மீதான இன அழிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த தமிழின அழிப்பின் உச்சக்கட்டமாக 2009 இல் முள்ளிவாய்க்காலில் மிகப்பெரும் தமிழின அழிப்பு சிறிலங்காவின் இராணுவத்தினால் நடாத்தப்பட்டது. இதற்கான அனைத்துலக நீதியை கோரி , மனிதவுரிமைப் பேரவையை (ஜெனிவா) நோக்கி ஆண்டுதோறும் கவனயீர்ப்பு பேரணி நடாத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டும் கொரோனா தடுப்பு சுகாதார விதிகளை கடைப்பிடித்து ஜெனிவா முன்றலில் தமிழர் உரிமைப் பேரணி நடைபெறவுள்ளது. அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக, எதிர்வரும் 27/02/2021 (சனிக்கிழமை ) அன்று முற்பகல் 11.00 மணியளவில் பின்லாந்தில் வாகனப்பேரணியொன்று நடைபெறவுள்ளது. வாகனப் பேரணிக்கான வழித்தடம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.அனைவரையும் இந்த தமிழர் உரிமைப்பேரணியில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

-தமிழர் ஒருங்கிணைப்பு குழு-பின்லாந்து ,

-தமிழ் இளையோர் அமைப்பு-பின்லாந்து

-பின்லாந்து தமிழர் பேரவை

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments