பிரான்சில் அதிரும் கொரோனா!

You are currently viewing பிரான்சில் அதிரும் கொரோனா!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ் நாட்டில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 45,641 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44,24,087 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 225 பேர் உயிரிழக்க, கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 93,378 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,86,607 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 40,44,102 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பிரான்ஸ் தற்போது 5-வது இடத்தில் உள்ளது. 
தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பிரான்ஸ் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலை பரவி வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து தற்போது பிரான்ஸ் நாட்டில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது

பகிர்ந்துகொள்ள