பிரான்சில் இருந்து தாயகம் சென்றவர் வெட்டிக்கொலை!

You are currently viewing பிரான்சில் இருந்து தாயகம் சென்றவர் வெட்டிக்கொலை!

யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் கூடாவளவு பகுதியில் ஆணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று(18) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

கொலை செய்யப்பட்டவர் ராஜகுலேந்திரன் பிரிந்தன் என்றும் அவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை நெல்லியடி சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply