பிரான்சில் ஊடகமையத்தின் புதிய பணிமனை திறந்துவைக்கப்பட்டது!

பிரான்சில் ஊடகமையத்தின் புதிய பணிமனை திறந்துவைக்கப்பட்டது!

பிரான்சில் ஊடகமையத்தின் (ஈழமுரசு) புதிய பணிமனை நேற்றுமுன்தினம் (22.02.2020) சனிக்கிழமை  மாலை 16.00 மணிக்கு   உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.  

பரிசின் புறநகர்ப் பகுதி ஒன்றில் அமைந்துள்ள இந்தப் பணிமனையை கேணல் பரிதி அவர்களின் தாயார் திறந்துவைத்ததுடன், ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கமும் செலுத்தினார்.

மங்கள விளக்கினை ஊடகமையத்தின் தலைவர் திரு.பு.சுமந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் பணிமனையின் பிரதான சந்திப்புக் கூடத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அங்கு ஊடகமையத்தின்  அடுத்த கட்ட முயற்சி குறித்த கருத்துக்களும்  வாழ்த்துக்களும்  கலந்துகொண்ட பிரமுகர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்தன.

ஊடகமையத்தின் தலைவர்,  பொறுப்பாளர் மற்றும்  ஈழமுரசு ஆசிரியர் ஆகியோர் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்ததுடன் தமது அடுத்தகட்ட பயணத்திற்கு அனைவரினது ஒத்துழைப்பையும் வேண்டிநின்றனர்.      

அத்தோடு அங்குவைக்கப்பட்டிருந்த, ஈழமுரசின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்ற மாவீரர்கள், நாட்டுப்பற்றாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரின் திருஉருவப்படங்கள் வைக்கப்பட்டு,  அவர்களின் பணிகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர், நிர்வாகப் பொறுப்பாளர், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கட்டமைப்புப் பொறுப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், நலன்விரும்பிகள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments