பிரான்சில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியது!

பிரான்சில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியது!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 32 லட்சத்தைக் கடந்தது.

சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பிரான்ஸ் 6-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 32 லட்சத்து ஆயிரத்து 461 ஆக உள்ளது. அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 76,512 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள