பிரான்சில் சிவப்புப் பகுதிகளிலும், ஜுன் 2 கொலேஜ்களைத் திறக்க தீர்மானம்!

பிரான்சில் சிவப்புப் பகுதிகளிலும், ஜுன் 2 கொலேஜ்களைத் திறக்க தீர்மானம்!

ஜுன் மாதம் 2ம் திகதி முதல் சிவப்புப் பகுதிகளிலும் கொலேஜ்களை (collège) திறக்க முடிவு செய்துள்ளதாக, தேசியக் கல்வியமைச்சர் ஜோன் மிசேல் புளேங்கே தெரிவித்துள்ளார்.

முக்கியமாக 4ème மற்றும் 3ème வகுப்புகளைத் தொடங்க உள்ளதாகவும், வியாழக்கிழமை பிரதமரின் ஜுன் 2 இற்கான அறிவித்தல்களினைத் தொடர்ந்து இந்த அறிவித்தல்களை அறிவிக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதே போல் லிசேக்களையும், முக்கியமாக Lycée professionnels களைத் திறப்பதே தனது முக்கியமாக திட்டமாக உள்ளது எனவும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் 50% முதல் 60% ஆசியரியர்கள் மட்டுமே பணிக்குத் திரும்பி உள்ளதாகவும், பெருமளவில் ஆசியரியர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

திறந்த பல கொலேஜ்கள் மற்றும் பாடசாலைகளில் கொரோனாத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு மூடப்பட்டு வரும் நிலையில், அமைச்சரின் முடிவு அவசரப்பட்ட முடிவாகவே உள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments