பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத் தேர்வு தொடர்பான அறிவித்தல்!

பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத் தேர்வு தொடர்பான அறிவித்தல்!

பிரான்சில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ள  தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் எம்மால் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2020 தொடர்பாக எந்தவொரு உறுதியான முடிவையும் எடுக்கமுடியாதுள்ளது. தற்போதைய நிலைமையில், ஏற்கனவே திட்டமிட்ட நாட்களில் புலன்மொழிவளத் தேர்வினையும் எழுத்துத் தேர்வினையும் நடாத்தவியலாது என்பதனை வேதனையுடன் அறியத் தருகின்றோம்.

நாட்டு நிலைமை வழமைக்குத் திரும்பி, அரச பள்ளிகள் இயங்க ஆரம்பித்த பின்னரே தமிழ்ச்சோலைகளும் இயங்க முடியும். அந்த அமையத்திலேயே எம்மால் தேர்வுகள் தொடர்பான புதிய தீர்மானங்களை எடுக்கவியலும்.

இந்த இடர்மிகு நிலையிலும் எம் மாணவச் செல்வங்கள், 

உயிரினும் மேலான தாய்மொழியை இடைவிடாது கற்பதற்கு வழிகாட்டி உதவுமாறு பெற்றோர்கள், ஆசிரியர்கள், தமிழ்ச்சோலை நிர்வாகிகளிடம் வேண்டிநிற்கிறோம். 

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments