பிரான்சில் தாயும் மகளும் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை! – சடலங்கள் மீட்பு!!

You are currently viewing பிரான்சில் தாயும் மகளும் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை! – சடலங்கள் மீட்பு!!

Val-d’Oise மாவட்டத்தில் வசித்த தாய் மற்றும் அவரது மகள் இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இருவரின் சடலங்களும் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு வேலையில் இருந்து Saint-Ouen-l’Aumône (Val-d’Oise) நகரில் உள்ள வீட்டுக்கு திரும்பிய கணவர்,

இவ்விரு சடலங்களையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.  53 வயதுடைய அவரது மனைவி மற்றும் அவரது 21 வயதுடைய மகள் ஆகிய இருவர் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.  அதிர்ச்சியடைந்த கணவர் உடனடியாக காவல்துறையினரை அழைத்துள்ளார். அவருக்கு உளநல சிகிச்சைகள் அளிக்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.  இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் என அறிய முடிகிறது.  சம்பவ தொடர்பான முழுமையான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments