பிரான்சில் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் ஆணுறுப்புடன் காவல் நிலையம் சென்ற நபரால் பரபரப்பு!

You are currently viewing பிரான்சில் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் ஆணுறுப்புடன் காவல் நிலையம் சென்ற நபரால் பரபரப்பு!

தெற்கு பிரான்சில் காவல் நிலையத்திற்கு சென்ற ஒருவர் ஆணின் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் ஆணுறுப்பை பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பிரான்சின் Villeneuve மாவட்டத்திலேயே வெள்ளிக்கிழமை குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. காவல் நிலையம் சென்ற அந்த 38 வயது நபர், தாம் ஒரு கொலை செய்துள்ளதாக கூறி துண்டிக்கப்பட்ட தலை மற்றும் ஆணுறுப்பை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், தலை துண்டிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட ஆணின் உடல் ஒன்றை கைப்பறியுள்ளனர். கொலை வழக்கு தொடர்பாக கைதாகியுள்ள அந்த நபர் ஏற்கனவே போதை மருந்து தொடர்பில் கைதாகி சிறை என்றவர் என கூறப்படுகிறது.

மேலும், போதை மருந்து தொடர்பாகவே, இந்த கொலை சம்பவமும் நடந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கைதான நபரை உளவியல் சோதனைக்கு உட்படுத்திய பின்னர், விசாரணைக்கு உட்படுத்த இருப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் உண்மையான பின்னணி இன்னும் முழுமையாக வெளிவரவிவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும், குற்றவாளிக்கும் அவரால் பாதிக்கப்பட்டவருக்கும் இடையிலான உறவும் இன்னும் சரிபார்க்கப்படவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments