பிரான்சில் மருத்துவ மாணவிகள் உயிரிழப்பு!

You are currently viewing பிரான்சில் மருத்துவ மாணவிகள் உயிரிழப்பு!

பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச் மாணவிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி பயிலும் மாணவி கார்த்திகா கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் மந்துவில் வடக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த சினேகா சந்திரராசா (வயது-18) என்ற, பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி பயிலும் மாணவி கடந்த 13 ஆம் திகதி அகால மரணமடைந்துள்ளார்.
இவர் பிரான்ஸ் செவ்ரோன் தமிழ்ச்சோலையின் மாணவியும் ஆவர்.
இந்நிலையில் குறித்த இரு மாணவிகளின் அடுத்தடுத்த உயிரிழப்புக்கள் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பகிர்ந்துகொள்ள