பிரான்சில் மேலும் ஒரு தமிழர் காய்ச்சலினால் மரணம்!

பிரான்சில் மேலும் ஒரு தமிழர்   காய்ச்சலினால் மரணம்!

பிரான்சில் ivry sur seine இல் கொரோனா தொற்றிற்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார் என முன்னர் தெரிவிக்கப்பட்டபோதும் அவர் சாதாரண காய்ச்சலினாலேயே பாதிக்கப்பட்டிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். வசாவிளானைச் சேர்ந்த கந்தையா மகாதேவன் (வயது 61) அவர்கள் இன்று (05.04.2020) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பிரான்சில் அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.

காய்ச்சல் காரணமாக ஒரு வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகி வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது.

இவர் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு செயற்பாட்டாளர் சிறி அவர்களின் தந்தையார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அவருக்கும்  அவர் குடும்பத்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கின்றோம்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments