பிரான்சில் 25 வயதுக்குட்பட்ட இளவயதினர்க்கு உதவு தொகை வழங்கப்படும்!

பிரான்சில் 25 வயதுக்குட்பட்ட இளவயதினர்க்கு உதவு தொகை வழங்கப்படும்!

25 வயதுக்குட்பட்ட இளவயதினர் சுமார் எட்டு லட்சம் பேருக்கு 200 ஈரோக்கள் உதவு தொகை வழங்க அரசு தீர்மானித்துள்ளது என்று பிரதமர் எத்துவா பிலிப் அறிவித்திருக்கிறார்.

எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் இக்கொடுப்பனவு வழங்கப்படும்.

நாட்டை பெரும் முடக்கத்தில் இருந்து விடுவிப்பதற்காக தயாரிக்கப்பட்ட திட்டத்தின் வரைவை இன்று செனற் சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இத்தகவலை வெளியிட்டார்.

வருமானம் இழந்த பல்கலைக்கழக மாணவர்கள், உள்ளகப்பயிற்சிகள், தொழிற்பயிற்சிகள் தடைப்பட்டதால் பாதிக்கப்பட்டிருக்கும் இளவயதினர், குடும்பங்களைப்பிரிந்து நாட்டின் கடல் கடந்த நிலப்பகுதிகளில் தனித்து தங்கியிருந்து கல்வி கற்போர் இந்த உதவு தொகைக்குத் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இவர்களில் வீட்டு வாடகை உதவிக் கொடுப்பனவை (L’aide personnalisée au logement – APL) ஏற்கனவே பெற்று வருபவர்கள் இந்த விசேட உதவு தொகையைப் பெறுவதற்கு உரித்துடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளிருப்பின் கடைசி நாள் (மே 11) நெருங்கிவரும் நிலையில், நாட்டை வழமைக்குத் திருப்ப வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் இன்றைய தனது உரையில் விளக்கமளித்தார்.

(04-05-2020 பாரிஸ். – குமாரதாஸன்)

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments