பிரான்சு வாழ் தமிழ் மக்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்!

You are currently viewing பிரான்சு வாழ் தமிழ் மக்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்!

தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் பிரான்சு வாழ் தமிழ் மக்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்!

வணக்கம்.
அன்புடையீர்…

கொடிய கிருமியின் தொற்றுநோய் பெரும் பாதிப்புக்களையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.

இச்சூழலில் அன்றாட வாழ்வுக்கான கேள்விகள் எழாமலும் இல்லை. நம்மை நாம் நோய் பரவாது பாதுகாத்துக்கொள்வதோடு, அச்சம் தவிர்க்கும் வார்த்தைகளையும், வாழும் நாட்டின் சட்டதிட்டங்களை பேணும் வகையிலும் புரிதலை ஏற்ப்படுத்துதல் அவசியமாகின்றது.

இவை தவிர,

இங்கு வாழும் நம் உறவுகள் வாழ்விட விசாவின்றி அத்தியாவசிய பொருட்கள் பெறவும் முடியாத நிலைகளில் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு பிரதேச பிராங்கோ தமிழ்ச் சங்கமும் தங்களால் முடிந்தளவு உதவிக்கரம் கொடுக்குமாறு அன்புடன் பணிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவசர அத்தியாவசிய உதவியை பெறவிரும்புவோர் தங்கள் பகுதி பிராங்கோ தமிழ்ச்சங்கத்துடனும் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொள்ளலாம் என்பதையும் அறியத்தருகின்றோம்.

நன்றி
தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு
பொறுப்பாளர்
பாலன்..+33662846606
பரப்புரை +33660822719 மேலதிக தொடர்புகளுக்கு:
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு. 0143150421

பகிர்ந்துகொள்ள