பிரான்ஸின் புதிய பிரதமராக ‘ஜீன் கஸ்டெக்ஸ்‘ நியமனம்!

You are currently viewing பிரான்ஸின் புதிய பிரதமராக ‘ஜீன் கஸ்டெக்ஸ்‘ நியமனம்!

பிரான்ஸில்  பிரதமர் பதவியிலிருந்து எடோவட் பிலிப் (Edouard Philippe) இராஜினாமா செய்துள்ளமையையடுத்து அவருக்குப் பதிலாக ஜீன் கஸ்டெக்ஸ் (Jean Castex )புதிய பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக பிரான்ஸ் அரசானது பொருளாதாரப் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதால் நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படுமென அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன்(Emmanuel Macron) தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாகப் பிரான்ஸ் பிரதமர் எடோவட் பிலிப் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 இதனையடுத்து புதிய பிரதமராக ஜீன் கஸ்டெக்ஸ் என்பவர் புதிய பிரதமராக நேற்றைய தினம்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள