பிரான்ஸ் தேர்தலில் போட்டியிடும் இளம் தமிழ் பெண்!

You are currently viewing பிரான்ஸ் தேர்தலில் போட்டியிடும் இளம் தமிழ் பெண்!

பிரான்ஸில் நடைபெறவுள்ள தேர்தலில் இளம் தமிழ் பெண் ஒருவர் போட்டியிடுகின்றார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் மாவட்டத் தேர்தல் மற்றும் பிராந்தியத் தேர்தல் பிரான்ஸில் நடைபெறவுள்ளது.

இம்முறை தேர்தலில் பிரான்ஸ் நாட்டில் Seine-Saint-Denis மாவட்டத்துக்கான வேட்பாளர்களாக bondy மற்றும் Pavillons-sous-Bois நகரங்கள் இணைந்த தொகுதியில் முதன் முறையாக செல்வி பிறேமி பிரபாகரன் என்ற இளம் தமிழ்ப் பெண்ணொருவர் இணை வேட்பளராக போட்டியிடுகிறார்.

பிறேமி பிரபாகரன் அவர்கள் 2020 நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் பொண்டி bondy நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்று bondy நகசபை உறுப்பினராக தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் இம்முறை UDI ,Les Républicains, Libres ஆகிய கட்சிகளின் சார்பில் bondy மற்றும் pavillon -sous-Bois நகரங்கள் இணைந்த தொகுதியில் இணை வேட்பளராகப் போட்டியிடுகின்றார்.

Bondy நகரசபையில் கடந்த மார்ச் 27ஆம் திகதி அன்று தமிழீழ மக்களுக்கு ஆதரவான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.   

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments