பிரான்ஸ் விமான தாங்கி கப்பலில் இருந்த 1900 பேர் தனிமைப்படுத்தலில்!

பிரான்ஸ் விமான தாங்கி கப்பலில் இருந்த 1900 பேர் தனிமைப்படுத்தலில்!

பிரெஞ்சு விமான தாங்கி கப்பலில் இருந்து வந்தடைந்த 1700 இராணுவத்தினர் மற்றும் உதவியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  அத்லாண்டிக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த பிரெஞ்சு இராணுவத்துக்கு சொந்தமான சாள்-து-கோல் விமானதாங்கி  கப்பலில் உள்ள இராணுவத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கப்பல் துரிதமாக Toulon துறைமுகத்துக்கு திருப்பப்பட்டது. நேற்று நண்பகலில் இந்த கப்பல் இத்துறைமுகத்தை வந்தடைந்தது. இராணுவத்தினரில் 50 பேருக்கு கொரோனா தொற்று முன்னதாகவே உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.  அதைத் தொடர்ந்து, கப்பலில் இருந்த 1700 இராணுவத்தினருக்கும் அவர்களுக்கு உதவியாளர்களாக இருந்த 200 பேருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.  பின்னர் அவர்கள் அனைவரும் தனிப்பைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அடுத்த 15 நாட்களுக்கு அங்கு தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments