பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ்!

You are currently viewing பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ்!

பிரித்தானியாவில் Omicron வைரஸை விட அதிகமாக பரவக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் ஒரு புதிய கோவிட் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. XE எனப்படும் அந்த புதிய உருமாறிய வைரஸ், வேறு எந்த வைரஸை விடவும் அதிகமாக பரவக்கூடியதாக இருக்கலாம் என்று சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

XE என்பது BA.1 மற்றும் BA.2 ஆகிய ஓமிக்ரான் வகை வைரஸ்கள் சேர்ந்த ஹைபிரிட் வகை வைரஸ் என கூறப்படுகிறது. ஒரு நோயாளி கோவிட் நோயின் பல வகைகளால் பாதிக்கப்படும்போது இந்த hybrid வைரஸ்கள் வெளிப்படுகின்றன.

இந்த புதிய XE வைரஸ் Omicron-ன் BA.2 மாறுபாட்டை விட 10 சதவீதம் அதிகமாக பரவக்கூடியதாகத் தோன்றுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது . இருப்பினும், இந்த கண்டுபிடிப்புக்கு மேலும் உறுதிப்படுத்தல் தேவைப்படுகிறது என்று அமைப்பு மேலும் கூறியது.

XE முதன்முதலில் ஜனவரி 19 அன்று கண்டறியப்பட்டது என்றும் ஆனால் இதுவரை 637 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், Omicron-ன் BA.2 துணை மாறுபாடு உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

மார்ச் 26-ஆம் திகதியுடன் பிரித்தானியாவில் சுமார் 4.9 மில்லியன் மக்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய வாரத்தை விட 600,000 பேர் அதிகமாக இருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

அதேபோல் அமெரிக்கா மற்றும் சீனாவிலும் BA.2 வகை கோவிட் வைரஸ் தொற்று அதிகமாக பதிவாகியுள்ளன.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments