பிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதல்
இன்று பிற்பகல் Manchester எனும் இடத்தில் பயங்கரவாதி ஒருவர் மக்கள் இருக்கும் இடத்தை நோக்கி வாகனத்தை செலுத்தி வந்து வாகனத்தில் இருந்து இறங்கி கத்திக்குத்து தாக்குதலை நடாத்தியதாக பிரித்தானியா காவல்துறை தெரிவித்துள்ளது, இந்தத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டு நான்கு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி காவல்துறையால் சுடப்பட்டுள்ளார் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலதிக விசாரணைகளை பிரித்தானிய காவல்துறை மேற்கொண்டு வருகின்றது.






