பிரித்தானிய மாகாராணியை பதவி இறக்கும் “பார்பாடோஸ் / Barbados”!

You are currently viewing பிரித்தானிய மாகாராணியை பதவி இறக்கும் “பார்பாடோஸ் / Barbados”!

பிரித்தானியாவின் ஆளுமைக்குள்ளும், அதன் குடியேற்ற நாடாகவுமிருந்த “Barbados” நாட்டின் தலைமையாகவிருந்துவந்த பிரித்தானியா மாகாராணியை விலக்கிக்கொள்ள அந்நாடு முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1625 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 400 வருடங்களாக பிரித்தானிய அரச ஆளுமைக்குக்கீழ் இருந்து வந்த “Barbados”, 55 வருடங்களுக்கு முன், தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. எனினும், நாட்டின் அதியுயர் தலைமையாக இதுவரையும் பிரித்தானிய மகாராணியே இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாடு சுதந்திரம் பெற்றுக்கொண்ட நாளான நவம்பர் 30 ஆம் நாளில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரித்தானிய மாகாராணியை பதவி இறக்கும்
பதவி இறங்கும் மகாராணியும், பிரதமராக பதவி எடுத்துக்கொள்ளவிருப்பவரும்…

சுமார் 300000 மக்கள் தொகையை கொண்ட “Barbados”, “கரீபியன்” தீவுக்கூட்டங்களின் தீவுகளில் ஒன்றாகும். கடந்த ஒக்டோபர் மாதமளவில் அங்கு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பிரித்தானிய முடியாட்சியை அகற்றிவிட்டு குடியரசு நாடாக “Barbados” 30.11.2021 அன்று தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டுள்ளது. பிரித்தானிய முடியாட்சியிலிருந்து விடுபட்டு குடியரசாக “Barbados” மாறுவதாக உத்தியோகபூர்வமாக கொண்டாடப்படவிருக்கும் வைபவத்தில், பிரித்தானிய முடிக்குரிய இளவரசன் சார்ள்ஸ் கலந்துகொள்ளவுள்ளதாக “பக்கிங்ஹாம் அரண்மனை” அறிவித்துள்ளது.

“Barbados” இந்த இவ்வறிவிப்பை தொடர்ந்து, இன்றும் பிரித்தானிய மகாராணியை தத்தமது நாடுகளின் அதியுயர் தலைமையாக இன்னமும் கொண்டிருக்கும் நாடுகளும் “Barbados” இந்த இவ்வறிவிப்பை பின்தொடரலாமென எதிர்வு கூறப்படுகிறது. அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, ஜமேக்கா உட்பட 15 நாடுகளுக்கு பிரித்தானிய மகாராணியே அதியுயர் தலைமையாக இன்றும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments