பிரியங்கா பெர்ணான்டோ செலவை தமிழரே செலுத்தவேண்டும்!

பிரியங்கா பெர்ணான்டோ செலவை தமிழரே செலுத்தவேண்டும்!

பிரித்தானியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமைக்காக தண்டனை அறிவிக்கப்பட்டிருந்த,    பிரியங்க பெர்ணான்டோ, குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம், அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த தகவலை வழங்கியுள்ளது.

2018 பெப்ரவரி 4ம் திகதி  தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களே போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இது தொடர்பாக நீதிமன்றம் முன்னர் வழங்கிய தீர்ப்பை  திருத்தி,  இனப்படுகொலையாளி  பிரியங்க பெர்ணான்டோவுக்கு சாதகமாக வழங்கியுள்ளது.

வியன்னா சாசனத்தின் சிறப்புரிமைகள் அடிப்படையில் அவர் குற்றமற்றவராக நீதிமன்றால் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை

பிரியங்கா பெர்ணான்டோ செலவை தமிழரே செலுத்தவேண்டும் என்ற சாதனைனை தமிழருக்காக பிருத்தானியா செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள