பிருத்தானியாவில் கொரோனா ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,460 ஆக உயர்வு!

பிருத்தானியாவில் கொரோனா ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,460 ஆக உயர்வு!

உலக அளவில் அமெரிக்காவை மிகவும் பாதித்துள்ள இந்த வைரஸ் மற்றொரு வல்லரசு நாடான பிருத்தானியாவையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 37,460 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிருத்தானியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 412 பேர் பலியாகி உள்ளனர்.

இதன்மூலம் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 37,460 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 37 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 267,240 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிருத்தானியா 5வது இடத்தில் உள்ளது.

3 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments