பிரேசிலில் கொரோனா ; பலியானோர் எண்ணிக்கை 13,555 ஆக அதிகரிப்பு!

பிரேசிலில் கொரோனா ; பலியானோர் எண்ணிக்கை 13,555 ஆக அதிகரிப்பு!

கொரோனா தோற்றால் தென் அமெரிக்க நாடான பிரேசிலும் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றது. அங்கு நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் அங்கு இன்று இதுவரை மேலும் 7,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரேசிலில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,96,375 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை அங்கு 13,555 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் அதிபர் கொரோனா தொற்றைச் சரியாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தற்போதைய எண்ணிக்கையை விட உண்மையான எண்ணிக்கை 15 மடங்கு அதிகம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பிரேசில் தற்போது ஆறாவது இடத்தில் உள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments