பிறப்பால் தமிழனாகவும் செயலால் சிங்களவனாகவும் செயற்ப்படும் முரளின் திரைப்படத்தை விஜய்சேதுபதி தவிர்க்கவேண்டும்!!

பிறப்பால் தமிழனாகவும் செயலால் சிங்களவனாகவும் செயற்ப்படும் முரளின் திரைப்படத்தை விஜய்சேதுபதி தவிர்க்கவேண்டும்!!

பிறப்பால் தமிழனாகவும் செயலால் சிங்களவனாகவும் செயற்படும் முன்னாள் சிறீலங்காவின் முன்னணி மென்பந்து விளையாட்டுவீரர் முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாறு திரைப்படமாக்கப்படுவதாக வந்த செய்திகளை தொடர்ந்து தற்போது இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு பிரசுரம் தற்போது வெளியாகியுள்ளது.

முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாமல் ஈழ தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமியும் விஜய்சேதுபதி இந்த படத்தில் நடிக்க கூடாது என்று வேண்டுகோள் வைத்து பதிவிட்டுள்ளார். அதில், “விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். அவர் நடிக்கும் ‘யாதும் ஊரே யாவரரும் கேளீர்’ திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து, உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா நமக்கெதற்கு மாத்தையா? மாற்றய்யா?” என்று தெரிவித்துள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments