பிறழ்வடைந்த “கொரோனா” வைரஸ் பரவல்! “Oslo” நகர மக்களுக்கு எச்சரிக்கை!!

பிறழ்வடைந்த “கொரோனா” வைரஸ் பரவல்! “Oslo” நகர மக்களுக்கு எச்சரிக்கை!!

பிறழ்வடைந்த “கொரோனா” வைரஸ் (பிரித்தானிய வைரஸ்) நோர்வேயின் “Follo” என்ற பிரதேசத்தில் வேகமாக பரவிவருவதால், நோர்வே தலைநகர் “Oslo” வில் வசிப்பவர்கள், அனாவசியமாக வெளியில் நடமாடாமல் வீடுகளிலேயே இருக்கும்படி, “Oslo” மாநகரசபையின் தலைவர் “Raymond Johansen” அறிவுறுத்தியுள்ளார்.

தலைநகர் “Oslo” வை அண்டியுள்ள “Follo” என்ற இடத்தில் பிறழ்வடைந்த “கொரோனா” வைரஸ் மிக வேகமாக பரவிவருவதால், அவசர சந்திப்புக்களை நடத்திவரும் “Raymond Johansen”, நகர மக்கள் அனாவசியமாக வெளியில் நடமாட வேண்டாமெனவும், வெளியில் போகவேண்டிய அவசியமேற்படின் முகக்கவசத்தை கட்டாயமாக அணிய வேண்டுமெனவும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மிக வேகமாக பரவிவரும் பிறழ்வடைந்த “கொரோனா” வைரஸின் பரவல் தலைநகரில் பாதிப்பை ஏற்படுத்துவதை தடுக்குமுகமாக தலைநகரில் மிகக்கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டியேற்படலாமென எச்சரித்திருக்கும் மாநகரசபை நிர்வாகத்தின் தலைவர், மிக விரைவில் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்படுமென தெரிவித்துள்ளார்.

1 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments