பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய உர்சுலா புயல் – பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு!

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய உர்சுலா புயல் – பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு!

கடந்த 24-ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியை ‘ உர்சுலா’ என்ற அசுரப்புயல் மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கியது.
மின் கம்பங்கள் மற்றும்  மரங்களை சாய்த்தபடி காற்று சுழன்று அடித்தது. வீடுகளின் கூரைகள் பறந்தன. புயல் காற்றினால் கடலோரப் பகுதிகள் பெரும் பாதிப்படைந்தன. 
புயலுக்குப் பின் தொடர்ந்த கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் வசித்துவந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை வரை புயல் தாக்கியதில் பலியானவர்கள் எண்ணிக்கை  28 ஆக இருந்தது.
இந்நிலையில், வெள்ளம் வடிந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் உர்சுலா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் 12 பேர் காணாமல் போயிருப்பதாகவும் அவர்களை மீட்கும் முயற்சி நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments