புகலிடம் தேடி அவுஸ்திரேலியா சென்ற மன்னார் இளைஞன் உயிரிழப்பு!

You are currently viewing புகலிடம் தேடி அவுஸ்திரேலியா சென்ற மன்னார் இளைஞன் உயிரிழப்பு!

மன்னாரில் இருந்து புகலிடம் தேடி அவுஸ்திரேலியா சென்ற இளைஞன் இடைத் தங்கல் முகாமில் உயிரிழந்ததாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

மன்னாரைச் சேர்ந்த ரமணன் ராஜ்குமார் என்னும் 22 வயதுடைய இளைஞனே நேற்றுமுன்தினம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அவர் தொடர்பான ஏனைய விடயங்கள் வெளியாகவில்லை.

கடந்த 14ஆம் திகதி, அவர் நித்திரைக்கு சென்ற நிலையிலேயே மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை என்று அவுஸ்திரேலிய தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்குள் ஏதிலிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் மத்தியில் இவ்வாறான பல மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இறுக்கமான ஏதிலிக் கொள்கை அவர்களை மனதளவில் கடுமையாக பாதித்துவருவதும் இதற்கான காரணம் என்று அரன் மயில்வாகனம் குற்றம் சுமத்தியுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments