புங்குடுதீவில் பயங்கரம் பூசகர் அடித்துக் கொலை: கொலைக்கான பின்னணி என்ன?

புங்குடுதீவில் பயங்கரம் பூசகர் அடித்துக் கொலை: கொலைக்கான பின்னணி என்ன?

யாழ்.புங்குடுதீவு – ஊரதீவு சிவன்கோவில் கேணி அருகில் பூசகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பூசகர் அடித்து கொலை செய்யப்பட்டு பின்னர் சடலம் அங்கு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக காவல்த்துறையினர் கூறியுள்ளனர். 

ஊரதீவு சிவன் ஆலய குளக்கரையிலேயே அவரது சடலம் இன்று சனிக்கிழமை அதிகாலை கண்டறியப்பட்டது என்று பொலிஸார் குறிப்பிட்டனர். புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகர் ரூபன் சர்மா என்பவரேஇவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை காவல்த்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஊரதீவு சிவன்கோவில் பூசகரான கிளிநொச்சியை சேர்ந்த ரூபன் சர்மா (வயது33) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலைச்சம்பவம் நள்ளிரவு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கும் ஊர்காவற்றுறை பொலிஸார்  பூசகரின் உதவியாளரை காவல்த்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதேவேளை குறித்த பூசகரி புங்குடுதீவு உள்ளிட்ட தீவக பகுதிகளில் இறைச்சிக்காக கால்நடைகளை வெட்டுவதற்கு கடுமையான எதிர்ப்பு தொிவித்துவந்ததுடன், காவல்த்துறையினர்க்கு தகவல்களையும் வழங்கிவந்துள்ளார். 

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments