புடவை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியவர் கைது!

You are currently viewing புடவை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியவர் கைது!

யாழ். கல்வியங்காடு பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 24 வயதுடைய ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொக்குவில் மற்றும் மானிப்பாய் ஆகிய பகுதிகளில் வன்முறைகளில் ஈடுபட்ட நிலையில், அவர் மீது நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுகளும் உள்ளன.

நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக நேற்றுமுன்தினம் 28 வயதுடைய வர்த்தகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவத்தில் படுகாயமடைந்த 28 வயதுடைய வர்த்தகர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

காசுக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் உள்ள முரண்பாடு காரணமாக இந்த வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றது எனவும், இத்தாக்குதலை இருவரே மேற்கொண்டதாகவும் காவல்துறையினர் கூறினர்.

இந்த நிலையில் தெல்லிப்பழை பகுதியில் தலைமறைவாகியிருந்த இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் யாழ். மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments