புதிய பயண ஆலோசனை ; ஸ்வீடனில் ஒரு பகுதிக்கு மட்டுமே பயணிக்க அனுமதி!

  • Post author:
You are currently viewing புதிய பயண ஆலோசனை ; ஸ்வீடனில் ஒரு பகுதிக்கு  மட்டுமே பயணிக்க அனுமதி!

இது வெள்ளி பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறப்பட்டதாவது :-

சில கட்டுப்பாடுகளுடன், அனைத்து நோர்டிக் நாடுகளுக்கும் பயணம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. நோர்வே முழு நோர்டிக் நாடுகளுக்கும் பயணங்களை திறக்கின்றது, ஆனால்.., “ஏற்றுக்கொள்ளக்கூடிய தொற்று அழுத்தம்” உள்ள பகுதிகளுக்கு மட்டுமே இது பொருந்தும். இதன் பொருள் ஸ்வீடனில், அங்குள்ள Gotland க்கு மட்டுமே நீங்கள் பயணிக்க முடியும்.

இப்போது நோர்வே மக்கள் தனிமைப்படுத்தப்படாமல் பெரும்பாலான நோர்டிக் நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்றும், ஸ்வீடனில், கோட்லாண்ட் (Gotland) மட்டுமே கட்டுப்பாடுகளை பூர்த்தி செய்கிறது என்றும் மேலும், கோபன்ஹேகனுக்கு (Copenhagen) அதன் சொந்த கட்டுப்பாடுகள் உள்ளன என்றும் எர்னா சோல்பெர்க் (Erna Solberg) இன்றைய செய்தியாளர் கூட்டத்தில் கூறியுள்ளார்.

சுவீடனின் பிற பகுதிகளில் தனிமைப்படுத்தல் மற்றும் நுழைவு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன, மேலும் கோட்லாந்தைத் (Gotland) தவிர வேறு பகுதிகளுக்கு பயணம் செய்ய அறிவுறுத்தப்படவில்லை என்றும் எர்னா சோல்பெர்க் (Erna Solberg) மேலும் கூறியுள்ளார்.

மேலும், நோய்த்தொற்று நிலைமை மாறக்கூடும் என்று பிரதமர் கூறியுள்ளதாவது, புதிய கொரோனா நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புகள் உண்டு என்பதை உறுதி செய்கின்றது.

தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொடுக்கப்பட்ட தொற்று ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு மக்களை நாங்கள் பரிந்துரைக்கிறோம், என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

அதேபோல், வெளிநாடு செல்லும் நபர்களை, அந்தந்த நாடுகளில் பொருந்தும் விதிமுறைகளை சரிபார்க்குமாறும் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனவே நீங்கள் நோர்வே தவிர வேறு நாடுகளில் விடுமுறைக்கு செல்ல திட்டமிட்டால், வெளிநாட்டில் இருக்கும்போது நோய்த்தொற்று நிலைமை, கட்டுப்பாடுகள் மாறினால் குறுகிய காலத்தில் தனிமைப்படுத்தப்படுவதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள