புதிய பயண ஆலோசனை ; ஸ்வீடனைத் தவிர்க்கும் டென்மார்க்!

புதிய பயண ஆலோசனை ; ஸ்வீடனைத் தவிர்க்கும் டென்மார்க்!

இன்று வியாழன், டென்மார்க் அரசாங்கம் தனது புதிய பயண ஆலோசனையை வழங்கியுள்ளது. இப்போது, தொற்று அபாயம் குறைவாக இருக்கும் வரை, டென்மார்க் குடிமக்கள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஷெங்கனில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்யலாம் என்று ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஸ்வீடன் இன்னும் டென்மார்க் மற்றும் நோர்வே சுற்றுலா பயணிகளின் வருகைகளுக்காக தொடர்ந்து காத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இன்று வியாழன் ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது, டென்மார்க் ​​வெளியுறவு மந்திரி Jeppe Kofod கூறுகையில், டென்மார்க் அனைத்து ஷெங்கன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குமான பயண தடைகளை நீக்கியுள்ளதாக அறிவித்தார்.

நோய்த்தொற்றின் அளவு குறைவாக இருக்கும் வரை ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் டென்மார்க் குடிமக்கள் சுதந்திரமாக பயணிக்க முடியும், ஆனால் அவர்களால் ஸ்வீடன் அல்லது போர்த்துகலுக்கு இன்னும் பயணம் செய்ய முடியாது என்று மேலும் கூறப்பட்டுள்ளது.

புதிய பயண ஆலோசனைகள் ஜூன் 27 சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும்.

நோர்வே மற்றும் டென்மார்க் இடையிலான எல்லைகள் கடந்த ஜூன் 15 முதல் திறக்கப்பட்டுள்ளது .

  • நோர்வே குடிமக்கள் குறைந்தது ஆறு இரவுகளையாவது முன்பதிவு செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • நீங்கள் கோபன்ஹேகனில் (Copenhagen) அல்லது ஃபிரடெரிக்ஸ்பெர்க்கில் (Frederiksberg) தங்க முடியாது என்பது முன்னர் அறியப்பட்டது. ஆனால், அந்த விதிமுறை இப்போது மாறியுள்ளது.

ஜெர்மனி மற்றும் ஐஸ்லாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கும் இதே விதிமுறைகள் பொருந்தும்.

  • இம்முறை பல டென்மார் குடிமக்கள், தமது கோடைகால விடுமுறையை நாட்டிட்கு உள்ளேயே கழிப்பதால் டென்மார்க்கிலுள்ள உல்லாச விடுதிகளில் தங்குமிட வசதி குறைவாகவே உள்ளது.

நோர்வேக்கான புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனை திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது, ஆகவே நோர்வே குடிமக்கள் இப்போது டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து மற்றும் Færøyene தீவுகளுக்கு பயணிக்க முடியும்.

  • Stockholm நகருக்கு தெற்கே Gotland தீவைத் தவிர, நோர்வே குடிமக்கள் தனிமைப்படுத்தப்படாமல் ஸ்வீடனுக்குப் பயணிக்க முடியாது.
  • ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற பிற ஐரோப்பிய நாடுகளுக்கான நோர்வே பயண ஆலோசனை ஜூலை 15 ஆம் திகதி வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலதிக தகவல் : NRK

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments