புதிய விதிமுறைகள் : விருந்து மற்றும் வேடிக்கை நிகழ்வுகளுக்கான எச்சரிக்கைகள்!

You are currently viewing புதிய விதிமுறைகள் : விருந்து மற்றும் வேடிக்கை நிகழ்வுகளுக்கான எச்சரிக்கைகள்!

இன்று வியாழன், சுகாதார அமைச்சர் “Bent Høie” மக்களுக்கு இரண்டு மகிழ்ச்சியான செய்திகளை வழங்கியுள்ளார். இப்போது நீங்கள் ஒரு மீட்டர் தூர இடைவெளியை கடைப்பிடிக்கலாம், மேலும் 50 பேர் வரை பங்குகொள்ளும் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல், மக்கள் இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு, மற்றவர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், விருந்துகளை வாடகை மண்டபங்களில் ஏற்பாடு செய்யலாம் என்றும், திரை அரங்குகளுக்கு, நாடக அரங்குகளுக்கு சென்று வரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

நாங்கள் கொஞ்சம் சகித்துக்கொண்டு இந்த புதிய விதிமுறைகளை சிறப்பாக கடைப்பிடிக்க முடிந்தால், ஜூன் 15 முதல் 200 பங்கேற்பாளர்களுடன் இசை நிகழ்ச்சிகளை நடத்தலாம். இதன் பொருள் இந்த கோடைக்காலம், பெரிய இசை நிகழ்ச்சிகளுக்கான கோடைக்காலமாக இருக்காது என்று கலாச்சார அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

  • மே 17 கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்ய முடியுமா?
    ஆம், அதிகபட்சம் 50 பேர் என்ற விதிமுறைக்கு நீங்கள் கட்டுப்பட்டால் இதைச் செய்யலாம். ஒரு பொறுப்பான அமைப்பாளரும் அங்கு இருக்க வேண்டும். அவர், அந்த இடத்தில் பங்கேற்பாளர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் இருப்பதையும், புதிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப் படுவதையும் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் .
  • ஆபத்து முடிந்துவிட்டதா?
    இல்லை, துரதிர்ஷ்டவசமாக அது இல்லை. கை கழுவுதல், அக்குள் தும்மல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகள் அனைத்தையும் கடைப்பிடிப்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று Guldvog, Dagbladet பத்திரிகைக்கு கூறியுள்ளார்.

மேலதிக தகவல் : Dagbladet

பகிர்ந்துகொள்ள