புதுக்குடியிருப்பில் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் இருந்த 39 பேருக்கு கொரோனா!

புதுக்குடியிருப்பில் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் இருந்த 39 பேருக்கு கொரோனா!

புதுக்குடியிருப்பு திம்புலி பகுதியில் அமைந்துள்ள 68 ஆவது படைப்பிரிவின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் பேலியாகொட மீன் சந்தையுடன் தொடர்பு வைத்தவர்களில் 145 பேர் கடந்த 23.10.2020 அன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் மீதான பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளின் படி  39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியா கொட மீன்சத்தை மூடப்பட்டதன் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 863 பேர் தனிமைப்படுதல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள் படையினரின் தலையீட்டுடன் இவர்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள