புதுக்குடியிருப்பில் பிரபல வர்த்தகர் கொரோனாத் தொற்றினால் மரணம்!

You are currently viewing புதுக்குடியிருப்பில் பிரபல வர்த்தகர் கொரோனாத் தொற்றினால் மரணம்!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் பிரபல வர்த்தகர் ஒருவர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு அரசோலைப்பிள்ளையார் புடைவையக உரிமையாளரான சிவப்பிரகாசம் சிறீதரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக புதுக்குடியிருப்பில் கொரோனாப் பரவல் தீவிரம் பெற்றுள்ள நிலையில் சிறீதரனும் தொற்றுக்குள்ளான நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

உடல் நிலையில் தொடர்ந்தும் பாதிப்பு நீடித்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்.

அங்கும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments