புதுக்குடியிருப்பில் மின் ஒட்டுத் தொழிலாகத்தில் தீ விபத்து!

புதுக்குடியிருப்பில் மின் ஒட்டுத் தொழிலாகத்தில் தீ விபத்து!

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இயங்கிவரும் மின் ஒட்டு தொழிலாகம் ஒன்றில் நேற்று இரவ (09.10.20) இடம்பெற்ற தீ விபத்தின் போது பலஇலட்சம் ரூபா பெறுமியான பொருட்கள் சோதமடைந்துள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை இரவுவேளை கடையில் உள்ள சுவாமி படத்திற்கு ஏற்றப்பட்ட விளக்கினால் ஏற்பட்ட தீபரவல் கடை முழுவதும் பரவத்தொடங்கியுள்ளது.
பாரியளவில் தீபற்றி எரிந்துள்ளதை தொடர்ந்து அருகில் இருப்பவர்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பொலீசார் ஆகியோர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளார்கள்.
இந்த தீவிபத்தின் போது உயிர்சேதம் ஏதுவும் ஏற்படதா நிலையில் பல இலட்சம் ரூபா பெறுதியான பொருட்கள் தீயில் அழிந்துள்ளன.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments