புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களா!

புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களா!

புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி தோண்டும் நடவடிக்கை வெறுங்கையுடன் திரும்பினார்கள்!

”முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டதான வெடிபொருட்களை தேடி தோண்டும் நடவடிக்கை” ஒன்று (18.06.2020) முன்னெடுக்கப்பட்டுள்ளது….

புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து புதுக்குடியிருப்பு கோம்பாவில் இரண்டாம் வட்டாரப்பகுதியில் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் கடந்த கால போரின் போது வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடத்தில் தோண்டப்பட்ட போது எதுவித பொருட்களும் கிடைக்கவில்லை…..

குறித்த வீட்டுக்காணியில் போர் நடைபெற்ற காலத்தில் வெடிபொருட்கள் மற்றும் பெறுமதியான பொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக
பொலீசார்,படையினர்,கிராமசேவகர்,தொல்பொருள் திணைக்களம்,சிறப்பு அதிரடிப்படையினர்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் சுமார் மூன்று மணிநேரம் தோண்;டப்பட்ட போதும் எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில் தோண்டிய பகுதியினை மூடிவிட்டு சென்றுள்ளார்கள்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments