புதுக்குடியிருப்பில் வெடி பொருளுடன் இருவர் கைது!

புதுக்குடியிருப்பில்  வெடி பொருளுடன் இருவர் கைது!

புதுக்குடியிருப்பு குரவில் பகுதியில் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் கடத்தப்படுவதாக பொலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து .27.11 .2020 அன்று புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 200கிராம் வெடிபொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் குரவில் பகுதியை சேர்ந்த 23 மற்றும் 29 அகவை உடையவர்கள் என தெரியவந்துள்ளது.
இதில் ஒருவர் ஏற்கனவே வெடிபோருள் சம்பந்தமான வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியில் வந்தவர் என்பதும் இவர்களை பதில்மாவட்ட நீதவான் நீதிமன்ற வாசல் தளத்தில் முன்னிலைப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்

பகிர்ந்துகொள்ள