புதுக்குடியிருப்புசுனாமி நினைவாலயத்தில்!

புதுக்குடியிருப்புசுனாமி நினைவாலயத்தில்!

ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஆழுகையின் கீழ் உள்ள சுனாமி நினைவாலயத்தில் வணக்க நிகழ்வுகள் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு காலை 7.50 மணிக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
ஆழிப்பேரலையின் போது உயிர்நீர்த்த உறவுகளை புதுக்குடியிருப்பில் அடக்கம் செய்த இடத்தில் அமைக்கப்பட்ட சுனாமி நினைவாலயத்தில்  நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான 
செ.கஜேந்திரன்;,விநோனோகராதலிங்கம்,மற்றும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா,முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.
உயிரிழந்தவர்கள் நினைவான பொதுச்சுடரினை மாவைசேனாதிராச,செ.கஜேந்திரன்,வினோநோகரதலிங்கம்,சிவமோகான் ஆகியோர் இணைந்து ஏற்றிவைக்க தொடர்ந்து நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து மலர் வணகத்தினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் மற்றும் சுனாமியின் போது உறவுகளை இழந்த செல்வச்சந்திரன் ஆகியோர் தொடங்கிவைக்க தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளதுடன் 
சுனாமி நினைவாலய வளாகத்தில் புதைக்கப்பபட்டவர்களின் நினைவாக பெயர் பொறிக்கப்பட்ட பெயர் கல்லிற்கு மலர்தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.
மக்கள் பிரதிநிதிகளுடன் புதுக்குடியிருபு;பு பிரதேச செயலாளர்,பிரதேச சபையின் உறுப்பினர்கள் உயிரிழந்த உறவினர்கள் சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள