புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது!

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது!


முல்லைத்தீவு அளம்பிலைச் சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் அவர் பணிபுரிந்துவரும் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் பணியாற்றும் குறித்த பெண் ஊழியருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவருக்கான பரிசோதனை முடிவுகளை அடுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பரிசோதனை முடிவுகளில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் ஏனைய பணியாளர்கள் அனைவரும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments