புதுக்குடியிருப்பு குரவில் பகுதியில் வாள்வெட்டு ஒருவர் படுகாயம்!

புதுக்குடியிருப்பு குரவில் பகுதியில் வாள்வெட்டு ஒருவர் படுகாயம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்ப பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட குரவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டள்ளார்.


இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் நேற்று இரவு இரு குழுக்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது இதனை தொடர்ந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இதன்போது குரவில் பகுதியினை சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோ மரம் அறுக்கும் இரண்டு குழுக்களுக்கிடையிலேயே இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments