புதுக்குடியிருப்பு கைவேலி சனசமூக நிலையத்தினால் இலவச பதிவு திருமணம்!

புதுக்குடியிருப்பு கைவேலி சனசமூக நிலையத்தினால் இலவச பதிவு திருமணம்!


புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள கைவேலி சனசமூக நிலைத்தின் ஏற்பாட்டில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் நிலையினை கருத்தில் கொண்டு புதிதாக திருமணம் செய்யவுள்ளவர்கள் பதிவு திருமணம் செய்துகொள்ளமுடியாத  நிலையில் காணப்படுகின்றார்கள் 
அவ்வாறானர்வர்களுக்கு இலவச பதிவுத்திருமணம் செய்துவைக்கும் நடவடிக்கை ஒன்றினை கைவேலி சனசமூக நிலைய நிர்வாகத்தினர் முடிவுசெய்து அதற்கான தொடக்க நிகழ்வினையும் நடத்தியுள்ளார்கள்.
09.09.2020 அன்று புதிதாக திருமணம் செய்துள்ள குடும்பத்திற்கு இலவசமாக பதிவாளர் முன்னிலையில் பதிவு திருமணம் செய்தவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உதவி தவிசாளர் க.ஜெனமேஜயந்,மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவி செயலாளர்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கைவேலி சனசசமூக நிலையத்தினர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments